×

கேரளாவில் ஒரே நாளில் 34,694 பேருக்கு கொரோனா: 23ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று உயர்வால் வரும் 23ந்தேதி வரை முதல் மந்திரி பினராயி விஜயன் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்பொழுது, கேரளாவில் 34,694 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.  93 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், மொத்த உயிரிழப்பு 6,243 ஆக அதிகரித்து உள்ளது. 31,319 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால் இதுவரை மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 16,36,790 ஆக உயர்வடைந்து உள்ளது என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறும்பொழுது, கேரளாவில் தொற்று விகிதம் தொடர்ந்து அதிக அளவில் உள்ளது.  அதனால், கேரளாவில் அமலில் உள்ள முழு ஊரடங்கை வருகிற 23ந்தேதி வரை நீட்டிப்பது என மாநில அரசு முடிவு செய்துள்ளது….

The post கேரளாவில் ஒரே நாளில் 34,694 பேருக்கு கொரோனா: 23ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Chief Minister ,Pinarayi Vijayan ,
× RELATED கேரளாவில் நகரசபை அலுவலகத்தில்...