×

கூலி உயர்வு கேட்டு நெசவாளர்கள் தொடர் போராட்டம்: 25 ஆயிரம் விசைத்தறிகள் முடங்கியது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை பகுதியில் கூலி உயர்வு கேட்டு 25 ஆயிரம் விசைத்தறிகளை இயக்காமல், சுமார் ஒரு லட்சம் நெசவாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, சொரக்காய்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, புச்சிரெட்டிப்பள்ளி, மத்தூர், ஸ்ரீகாளிகாபுரம், விடியங்காடு உட்பட 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் லுங்கிகள் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து பாவு, நூல் வாங்கி லுங்கி உற்பத்தி செய்த லுங்கிகளுக்கு கூலியை நெசவாளர்கள் பெற்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளநிலையிலும் நெசவாளர்களுக்கு கூலி உயர்த்தப்பட வில்லையாம். இது குறித்து பலமுறை மொத்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கூலி உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதட்டூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஒரு லட்சம் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான உற்பத்தி முடங்கி உள்ளது….

The post கூலி உயர்வு கேட்டு நெசவாளர்கள் தொடர் போராட்டம்: 25 ஆயிரம் விசைத்தறிகள் முடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pothattur Pettai ,Thiruvallur district ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை