×

கூடலூர் அருகே நள்ளிரவில் வீட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

கூடலூர்: கூடலூர் அருேக நள்ளிரவில் வீட்ைட உடைத்து காட்டு யானை அட்டகாசம் ெசய்தது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவாலா அட்டி பகுதியில் வசிப்பவர் முருகையா. கூலித் தொழிலாளியான இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டு இருந்தார். இரவு 2 மணியளவில் அப்பகுதியில் புகுந்த 2 காட்டு யானைகள் முருகையாவின் வீட்டின் பின்புற சமையலறை கூரை மற்றும் அருகில் இருந்த அறையின் சுவற்றை இடித்து உள்ளே இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியது. யானை வீட்டை உடைப்பது அறிந்த முருகையா குடும்பத்தினருடன் முன்புற வாசல் வழியாக அருகில் உள்ள வேறு ஒரு வீட்டிற்கு சென்று தப்பினார். தகவலறிந்து காலை நேரத்தில் வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் இப்பகுதியில் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுத்தனர்….

The post கூடலூர் அருகே நள்ளிரவில் வீட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Nilgiri District ,Kudaluru ,Atakasam ,Dinakaraan ,
× RELATED விளைநிலங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சல்