×

கூடலூரில் கனமழை மரம் விழுந்து 2 இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் கள்ளிக்கோட்டை சாலை, மைசூர் சாலை ஆகிய 2 இடங்களில் இன்று காலை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர்-மைசூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் சாலையோரம் இருந்த மூங்கில் புதர் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கூடலூர்-கள்ளிக்கோட்டை சாலையில் கோழிப்பாலம் மற்றும் அரசு கல்லூரி இடையேயான பகுதியில் ஒரே இடத்தில் 4 மரங்கள் விழுந்ததால், சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மரங்கள் விழுந்ததால், அப்பகுதிகளில் மின் கம்பிகள் அருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை முதல் கனமழை பெய்ய துவங்கி இரவு முழுவதும் கொட்டியது. இதனால், பாண்டியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. …

The post கூடலூரில் கனமழை மரம் விழுந்து 2 இடங்களில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Kudalur ,Kudalur Kallikottai Road ,Mysore Road ,
× RELATED கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!