×

குழந்தைக்கு அரிய இருதய கோளாறு 7.5 மாத கருவை கலைக்க அனுமதி: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த 30 வயதான பெண், தான் கருவுற்ற 5வது வாரத்தில் இருந்து வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை செய்து வந்தார். ஆனால், 20வது வாரத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தையின் இதய வளர்ச்சியில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால், குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் இறந்து விடலாம் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் கூறினர். இதையடுத்து, மருத்துவ கருச்சிதைவு சட்டப்படி ‘தனது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி’ பாதிக்கப்பட்ட பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளி வழங்கிய தீர்ப்பில், ‘மருத்துவ கருச்சிதைவு சட்டத்தின்படி 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை மட்டுமே கலைக்க முடியும். இருந்தாலும், இப்பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அரிதான இருதய நோய் ஏற்பட்டு இருப்பதால், 30 வாரங்களாகி (ஏழரை மாதம்) இருந்தாலும் கருக்கலைப்பை செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.பிறவி நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை பிரசவித்தால் பெண்ணின் மனம் கடுமையாக பாதிக்கப்படும். அது கருவை கலைக்கும் வலியைவிட அதிகமானது. எனவே, அப்பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற நீதிமன்றம் அனுமதிக்கிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். …

The post குழந்தைக்கு அரிய இருதய கோளாறு 7.5 மாத கருவை கலைக்க அனுமதி: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Delhi High Court Action ,New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு