×

கல்விக் கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகளை தரைத்தள அறையில் பூட்டி வைத்த பள்ளி நிர்வாகம்

டெல்லி: டெல்லியில் ரெபியா என்ற பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகளை தரைத்தள அறையில் பூட்டி வைத்த பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று, பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், தங்களின் குழந்தைகள் அழுது அழுது சோர்ந்து போயிருப்பதை பார்த்து அதிர்ந்தனர். பின்னர் குழந்தைகளிட்ம் கேட்ட போது தான், பள்ளியில் காற்றோட்டமற்ற அறையில் 5 மணி நேரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், ரபியா பப்ளிக் என்ற பள்ளியின் நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பிஞ்சுக் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் தரைத்தளத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை...