×

குளித்தலை ரயில் நிலையத்தில் புதிதாக ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம்

 

குளித்தலை, மே. 24:குளித்தலை ரயில் நிலையத்தில் புதிதாக ரவுண்டானா சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.கரூர்மாவட்டத்தில் கரூர் ரயில் நிலையத்திற்கு அடுத்து உள்ள ரயில் நிலையம் குளித்தலை ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தில் தினந்தோறும் மங்களூர்-சென்னை, கொச்சின் நாகூர், கோயம்புத்தூர், மயிலாடுதுறை, மன்னார்குடி, கோயம்புத்தூர், விரைவு ரயில்களும் ஈரோடு திருச்சி, கரூர் திருச்சி, சேலம் மயிலாடுதுறை, பாலக்காடு திருச்சி பயணிகள் ரயிலும் சென்று வருகின்றன. எனவே ஆயிரக்கணக்கான பயணிகள் தொழிலாளர்கள் பள்ளி மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் சென்னை கொச்சின் பெங்களூர் மைசூர் செல்லும் விரைவு ரயில்களுக்கு அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர் அப்போது வாகனங்கள் வந்து திருப்ப முடியாத நிலை உள்ளது.

The post குளித்தலை ரயில் நிலையத்தில் புதிதாக ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kulithalai railway station ,Kulithalai ,Karur railway station ,Karur district ,Kulithalai railway ,Mangalore- ,Chennai ,Cochin-Nagur ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...