×

குளித்தலை அருகே மண்மேட்டு புற்று மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

 

குளித்தலை, ஆக. 17: குளித்தலை அடுத்த கணக்குப்பிள்ளை ஊரில் அமைந்துள்ள மண் மேட்டு புற்று மாரியம்மனுக்கு சர்வ சக்தி படைத்த சமயபுரம் மாரியம்மன் கட்டளை படி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 19ம் ஆண்டு காவிரி நதிக்கரையில் இருந்து விரதம் இருந்து பக்தர்கள் பால்குடம் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து காவிரி கடம்பன் துறையில் இருந்து மேளதாளத்துடன் புறப்பட்டு கடம்பர் கோயில் சுங்க கேட் ரயில்வே கேட் கோட்டைமேடு சத்தியமங்கலம் வழியாக கோயிலை சென்றடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குழுவினர் செய்திருந்தனர்.

The post குளித்தலை அருகே மண்மேட்டு புற்று மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா appeared first on Dinakaran.

Tags : Balkuta festival ,Manmettu Tuputu Mariamman ,Kulithalai ,Metu ,Puttu Mariamman ,Kantapillai ,Cauvery ,Samayapuram ,Mariamman ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...