×

குளத்தூர் பகுதியில் புகையிலை விற்ற மூவர் கைது

குளத்தூர், நவ. 15: குளத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குளத்தூர் எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார், கிழக்கு கடற்கரை சாலை கு.சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வைப்பாறு சிவன் கோயில் தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் முனியசாமி என்பவரது பைக்கை சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொட்டலங்களை விற்பதற்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக்குடன் புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிப்பிகுளம் சுனாமி காலனி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற நமசிவாயபுரம் கந்தசாமி மகன் அசோக்குமார்(39), வைப்பாறு பஸ் ஸ்டாப் அருகே புகையிலை பொருட்கள் விற்ற வைப்பாறு வடக்குத்தெருவை சேர்ந்த ராஜபாண்டி மகன் சரவணக்குமார்(37) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

The post குளத்தூர் பகுதியில் புகையிலை விற்ற மூவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kulathur ,SI Muthuraja ,East Coast Road Ku.Subramaniapuram ,Vaiparu Shiva ,Dinakaran ,
× RELATED முகிழ்த்தகம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க மக்கள் கோரிக்கை