×

குறைந்து வரும் கொரோனா தொற்று: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 11.3.0 மணிக்கு தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7-ம் தேதி காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.   தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. கொரோனா அதிகம் பரவும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்பு உள்ளது. 
தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 1 முதல் ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் ஆம்பூலன்ஸ் செல்ல மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

The post குறைந்து வரும் கொரோனா தொற்று: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Declining ,Corona pandemic ,Tamil Nadu ,Chennai ,Chief of the CM ,G.K. Stalin ,Chief Minister ,
× RELATED இளைஞர் காங். தலைவராக உதய் பானு சிப் நியமனம்