×

குமுளி மலைச்சாலையில் 10 மாதங்களுக்குப் பின் போக்குவரத்து தொடக்கம்.: பொங்கல் சமயத்தில் சாலையை திறந்ததால் மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி

குமுளி: தமிழக- கேரள எல்லையான குமுளி மலைச்சாலையில் 10 மாதங்களுக்குப் பிறகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளா, தமிழகம் இடையிலான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கினாலும். கேரள-தமிழகத்தை இணைக்கும் மலைச்சாலையில் போக்குவரத்து தொடங்கவில்லை. பாலம் கட்டுதல், தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்றதே அதற்க்கு காரணம். தற்போது 90% பணிகள் நிறைவடைந்ததால், குமுளி மலைச்சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் சமயத்தில் சாலை திறக்கப்பட்டதால் இரு மாநில எல்லையோர மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல மீண்டும் இயக்க தொடங்கியுள்ளது. …

The post குமுளி மலைச்சாலையில் 10 மாதங்களுக்குப் பின் போக்குவரத்து தொடக்கம்.: பொங்கல் சமயத்தில் சாலையை திறந்ததால் மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kumuli ,Pongal ,Tamil Nadu- Kerala border ,Corona ,Kumuli mountain ,Dinakaran ,
× RELATED பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்...