×

குமரியில் மாம்பழ சீசன் செங்கவருக்கை கிலோ ₹100க்கு விற்பனை பொதுமக்கள் மகிழ்ச்சி

நித்திரவிளை, ஜுன் 23; குமரி மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் விளையக்கூடிய மாம்பழங்களில் மிகவும் பிரபலமானது செங்கவருக்கை மாம்பழம். இதன் அலாதி ருசியை வேறு எந்த மாம்பழத்திலும் எதிர்பார்க்க முடியாது. குமரி மாவட்டத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் இந்த மாம்பழம் கிடைக்கும். ஏப்ரல் மாதத்தில் ஒரு கிலோ மாம்பழம் ரூ.220க்கு விற்பனையானது. தொடர்ந்து மழை இல்லாததால் மாமரத்தில் காய்த்த அனைத்து செங்கவருக்கை மாங்காய்கள், நன்கு விளைந்து, பழுத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது. அதிகமான மாம்பழங்கள் சந்தை மற்றும் பெட்டிக்கடைகளில் விற்பனைக்கு வரத்தொடங்கியதால் ஒரு கிலோ ரூ.220 விற்பனையான மாம்பழம், தற்போது ஒரு கிலோ ரூ.80 முதல் 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. செங்கவருக்கை மாம்பழம் மலிவாக கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர். செங்கவருக்கை மாம்பழத்தின் விலை குறைந்துள்ளதால், ஏனய ரக மாம்பழங்களின் விலைவீழ்ச்சியடைந்துள்ளது.

The post குமரியில் மாம்பழ சீசன் செங்கவருக்கை கிலோ ₹100க்கு விற்பனை பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nithravila ,Dinakaran ,
× RELATED குமரியில் நீர்நிலை கரையோரம்...