×

குமரியில் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய பெண்ணுக்கு ஒமிக்ரான்: தாமதமாக வந்த பரிசோதனை முடிவால் அதிர்ச்சி

நாகர்கோவில்: குமரியில் கொரோனா சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆன பெண்ணுக்கு ஒமிக்ரான் உறுதியானது. அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா டெல்டா வைரஸ்  பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் பரவி வருவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் கேரளாவையொட்டி உள்ளதாகவும், வான்வழி, கடல் வழி மார்க்கமாக பலர் வருவதாலும் இங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக மாறி உள்ளது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்ற மீனவர்கள் படகுகளில் ஊர் திரும்பி உள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்கள் திருவனந்தபுரம் விமானம் நிலையம் வந்து , அங்கிருந்து காரில் ஊருக்கு வந்து விடுகிறார்கள். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து தகவல்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் புதுக்கடையை சேர்ந்த வாலிபர் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் வந்த சில நாட்களில் அவரது தாயாருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டது. இதையடுத்து நடந்த பரிசோதனையில் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வாலிபருக்கு நடந்த பரிசோதனையில் அவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். இருவரும் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இருவரின் சளி மாதிரிகளும் ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தாயாருக்கான பரிசோதனை முடிவில் அவருக்கு ஒமிக்ரான் உறுதியானது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வாலிபருக்கான பரிசோதனை முடிவு இன்னும் வர வில்லை.  இதற்கிடையே வாலிபரும், அவரது தாயாரும் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் என வந்திருப்பதால் மீண்டும் அவர்களை அழைத்து வந்து பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் தக்கலையை சேர்ந்த பெண் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் ஒமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளதால், பரிசோதனைக்காக சென்னைக்கு சளி மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 2700 பேரிடம் சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 13 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் 10 பேர் பெண்கள் ஆவர். நாகர்காவில் மாநகராட்சி, அகஸ்தீஸ்வரம், மேல்புறம், தோவாளை ஒன்றியங்களில் தலா 2 பேருக்கும், தக்கலை, திருவட்டார் ஒன்றியங்களில் தலா ஒருவருக்கும், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 3 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு 60,451 ஆக உயர்ந்துள்ளது.பயிற்சி டாக்டருக்கு கொரோனாஇன்று காலை நிலவரப்படி குமரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 39 பேர் உள்ளனர். பயிற்சி மருத்துவர் ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் 11 பேரும், கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் 28 பேரும் உள்ளனர். இதுவரை 11 லட்சத்து 75 ஆயிரத்து 126 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 8 லட்சத்து 34 ஆயிரத்து 679 பேர்  இரு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மாவட்டத்தில் முக கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற காரணங்களுக்காக  ரூ.2 கோடியே 79 லட்சத்து 47 ஆயிரத்து 562 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது….

The post குமரியில் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய பெண்ணுக்கு ஒமிக்ரான்: தாமதமாக வந்த பரிசோதனை முடிவால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagargo ,
× RELATED குமரியில் கன்னிப்பூ அறுவடை பணி...