×

குன்னூரில் சர்வதேச ஒலிம்பிக் தினம்

 

ஊட்டி, ஜூன் 24: குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் ஹாக்கி நீல்கிரிஸ் அமைப்பின் சார்பாக சர்வதேச ஒலிம்பிக் தினம் கடைபிடிக்கப்பட்டது. நவீன ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 23ம் தேதி சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. விளையாட்டுடன் தொடர்புடைய ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்க அம்சத்தை கொண்டாவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.இந்த ஆண்டிற்கான கருப்பொருள் லெட்ஸ் மூவ் என்பதாகும்.

இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு ஹாக்கி வீரர்கள் புது முயற்சியாக ஐஸ் ஹாக்கி போல், ஹாக்கி நீலகிரி வீரர்கள் காலில் ஸ்கேட்டிங்கை கட்டி கொண்டு கையில் ஹாக்கி மட்டையை பிடித்து ஸ்கேட்டிங் செய்த படியே அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். ஸ்கேட்டிங் செய்து கொண்டே பால் கண்ட்ரோல், ட்ரிபிளிங் மற்றும் பந்தை பாஸ் செய்வது போன்ற பல்வேறு பயிற்சிகளை வீரர்கள் செய்து காண்பித்தனர்.

இதில், மூத்த ஹாக்கி வீரர்கள், தேசிய நடுவர்கள் மற்றும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சிக்கு ஹாக்கி நீலகிரி அமைப்பின் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் பாலமுருகன் செய்திருந்தார்.

The post குன்னூரில் சர்வதேச ஒலிம்பிக் தினம் appeared first on Dinakaran.

Tags : International Olympic Day ,Coonoor ,Ooty ,Hockey Nilgiris Organization ,Arijar Anna High School ,Dinakaran ,
× RELATED நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல்...