×

குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு அச்சத்தில் மக்கள் காஷ்மீர் எல்லையில் தரிசாக கிடக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில்,  எல்லை வேலி மற்றும் சர்வதேச எல்லை அருகே ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் தரிசாக காய்ந்து கிடக்கிறது. ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள். மேலும், எல்லையோர கிராமங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடக்கிறது. இதன் காரணமாக எல்லையோரத்தில் இருக்கும் விவசாய நிலங்களை விவசாயிகள் பயன்படுத்தாமல் உள்ளனர். சம்பா மாவட்டத்தில் எல்லை வேலி மற்றும் சர்வதேச எல்லைக்கு இடையே ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்படாமல் உள்ளதாக அந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், கடந்த பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுபாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் புதுப்பிக்கப்பட்ட போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இதன் காரணமாக எல்லையில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மற்றும் தாக்குதல் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து எல்லை அருகே உள்ள நிலங்களில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சம்பா மாவட்ட துணை ஆணையர் அனுராதா குப்தா கூறுகையில், ‘‘ மாவட்ட நிர்வாகம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் விவசாயிகளுக்கு சாகுபடி செய்வதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். அவர்களது கவலைகளுக்கு தீர்வு காண்பதோடு, அவர்கள் தொடர்ந்து பயிரிடுவதற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். சம்பா விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக சுசேத்கர் எல்லை பகுதிக்கு அழைத்து சென்று அவர்களது விவசாய நடைமுறையை பின்பற்ற ஆலோசனை வழங்கப்பட்டது,” என்றார்….

The post குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு அச்சத்தில் மக்கள் காஷ்மீர் எல்லையில் தரிசாக கிடக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jammu ,Samba ,Jammu and ,Dinakaran ,
× RELATED மத வழிபாட்டு தலம் சேதம்: காஷ்மீரில் பதற்றம்