×

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

வேலூர், ஜூன் 7: குடியாத்தத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையை சேர்ந்தவர் மகேந்திரன்(எ)மகேஷ்(44). இவர் குடியாத்தம் டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, அடிதடி, வழிப்பறி என தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட மகேஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி மதிவாணன் செய்த பரிந்துரையின்பேரில், கலெக்டர் சுப்புலட்சுமி, மகேஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் வேலூர் சிறையில் உள்ள மகேஷிடம் குடியாத்தம் போலீசார் ஒப்படைத்தனர்.

The post குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Collector ,Subbulakshmi ,Gudiyatham ,Mahendran ,Mahesh ,Kamatchiyammanpet ,Gudiyatham Town ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...