×

குட் நியூஸ்!: அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந் தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக் கணிணி, மிதிவண்டி, பாடப் புத்தகம், காலணி, சீருடை, வரை படக் கருவிகள், இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி முதல் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் முதுநிலை பயிற்சி மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் நடப்பு கல்வியாண்டில் இம்மாதம் வரை இலவச பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளது. புதிய இலவச பயண அட்டை அச்சிட்டு வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாதம் வரை அரசு பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்குமாறு நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை சென்னை மண்டல துணை மேலாளர் ஆகியோருக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்….

The post குட் நியூஸ்!: அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க தமிழக அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Good ,Tamil Nadu Govt ,Chennai ,Government Vocational Training Station ,City Transport Corporation ,Government of Tamil Nadu ,
× RELATED உண்மைக்கு புறம்பான செய்தி...