×

வேழ முகத்தோனே... ஞான முதல்வனே...!

‘‘நல்ல காரியம் நடக்கும்போது கணபதியை மனசுல நினைச்சுக்க.... எது செய்றதா இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பி...’’ - என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு செயல்களிலும் விநாயகர் முழுமையாக நிறைந்திருக்கிறார். அதனால்தான் அவரை முழுமுதற்கடவுள் என ஆன்மிகவாதிகள் தெரிவிக்கின்றனர். அந்த விநாயகரை நினைத்து போற்றும் நாள்தான் விநாயகர் சதுர்த்தி. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆவணியில் வரும் வளர்பிறை சதுர்த்தியை, விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். என்ன நாளை(செப்.2) விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ரெடியாகிட்டீங்களா?

எப்படி கொண்டாடுவது :  விநாயகர் சதுர்த்தியன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, பூஜையறையில் மனப்பலகை எனப்படும் மரப்பலகையை வைத்து அதன் மீது கோலமிடவும். அதன் மீது தலைவாழை இலையை வடக்கு பார்த்து வைக்க வேண்டும். அதன் மீது தலைவாழையை வைத்து, பச்சரிசியை பரப்ப வேண்டும். பின்னர் வீட்டில் பிடித்த களிமண் பிள்ளையார் சிலை அல்லது வெளியில் வாங்கிய சிலையை வைக்க வேண்டும். அதற்கு அருகம்புல் மாலை அல்லது எருக்கம்பூ மாலையை அணிவிக்கவும். தொடர்ந்து பிள்ளையார் மூல மந்திரம் பாடி, மல்லிகை, செவ்வந்தி, அரளி போன்ற மலர்களால்  அர்ச்சனை செய்ய வேண்டும்.




பிடித்ததை படைத்து... தொடர்ந்து, விநாயகருக்கு பிடித்த பலகாரங்களான மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், பொரி, வடை, அவல் மற்றும் விளாம்பழம், வாழைப்பழம், திராட்சை, பேரிக்காய் உள்ளிட்டவைகளை வைத்து படைக்க வேண்டும். நல்ல நேரம் அல்லது கவுரி நல்ல நேரத்தில் படைப்பது சிறந்தது. காலை முதல் படைத்த விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்கும் வரை விரதமிருந்து மேற்கொள்வது மிகவும் சிறந்தது. கரைப்பது ஏன் : வீட்டில் வைத்து படைத்த களிமண் விநாயகர் சிலைகளை ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது ஏன் தெரியுமா? பழங்காலத்தில் ஆடிப்பெருக்கு காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

அப்போது ஆற்று மணலை தண்ணீர் அடித்துக் கொண்டு செல்லும். மழை பெய்தும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை இருந்து வந்தது. அதே நேரம் களிமண் நிலத்தில்,  மழை நீர் பூமியில் இறங்கும். எனவே, ஆடி முடிந்து ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று, களிமண் சிலைகளை ஆற்றில் கரைப்பார்கள். அந்த களிமண் ஆற்று நிலத்தில் படியும்போது, நிலத்தடி நீர் தங்கி நீராதாரம் பாதுகாக்கப்படும். இதனால்தான் சதுர்த்தியன்று, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இலையிலும் அர்ச்சனை: விநாயகருக்கு முக்கியமாக அரளி, எருக்கம்பூவை அல்லது அருகம்புல்லால் பூஜை செய்வது வழக்கம். மேலும், மகிழம், பாதிரி, தும்பை, செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, ஊமத்தை, சம்பங்கி, புன்னை, மந்தாரை, மாதுளம், கண்டங்கத்திரி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர் உள்ளிட்ட பூக்களால் அர்ச்சிக்கலாம். கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு, மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை உள்ளிட்ட இலைகளையும் பயன்படுத்தலாம்.

ஸ்லோகம்  சொல்லுவோமா?

வீட்டுல பென்டிரைவ்ல விநாயகர் பக்தி பாடல்களை கேட்டபடியே பூஜிக்கலாம். அதே நேரம் சில மந்திரங்களை சொல்லி செய்வது சிறப்பு. முயற்சிக்கலாமா?

விநாயகர் சகஸ்ரநாமம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்ப்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தயே...


விநாயகர் காயத்ரி மந்திரம்
வக்ரதுண்டாய ஹீம்ஓம் நமோ
ஹேரம்ப மதமோதிதமம சர்வ சங்கடம்
நிவாரயே ஸ்வாஹாஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ...

அங்கரனுக்கு அபிஷேகம்

பொதுவாக, வீட்டில் யாரும் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆனால், விநாயகருக்கு நீங்கள் செய்யலாம். கீழே தரப்பட்ட நீண்....ட பட்டியலில், உங்களுக்கு தேவையானதை டிக் பண்ணிக்குங்க...
தண்ணீர், எண்ணெய், சீயக்காய், பஞ்சகவ்யம், ரசப்பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர், சந்தனாதித்தைலம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர்,  மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப்பொடி கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

அருகம்புல்லை  படைப்பது ஏன்?

‘‘500 ரூபாய்க்கு மாலை வாங்க வேண்டாம்... 5 ரூபாய்க்கு அருகம்புல் மாலை வாங்கி சாத்துங்க கணபதிக்கு... அது போதும்...’’ என்பார்கள். அருகம்புல்லோட ஆனைமுகத்தான் கனெக்ட் ஆனது எப்படி என பார்க்கலாமா?
எமனின் மகன் அனலாசுரன். இவன் மூர்க்கனாக மாறி தேவர்களுக்கு தொல்லை தந்தான். இயல்பிலேயே அவன் உடல் அனல் வீசும். அதனால், யாருமே அவனை நெருங்க முடியாது. தேவர்கள் விநாயகரிடம் முறையிட்டனர். விநாயகர் பெரும் அனல் அவதாரம் எடுத்து அனலாசுரனை வீழ்த்தினார்.

அவன் மேலும் உருப்பெறக்கூடாது என்றெண்ணி அந்த சாம்பலை விழுங்கினார். ஆனால் நடந்ததோ வேறு. விநாயகரின் உடலை அனல் தாக்கியது. வெப்பத்தை தணிக்க நீராடி பார்த்தார். என்னென்னவோ செய்து பார்த்தார். வெப்பம் சிறிதும் குறையவில்லை. அப்போது சப்த ரிஷிகளான அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகியோர், 21 அருகம்புல் கட்டை விநாயகரின் தலையில் வைத்துள்ளனர். உடனே, விநாயகரின் உடலை வாட்டிய வெப்பம் தணிந்தது. அன்று முதல் விநாயகருக்கு மிகவும் பிடித்து பொருளாக அருகம்புல் ஆகிப்போனதாம்.

அங்கரனுக்கு அபிஷேகம்


பொதுவாக, வீட்டில் யாரும் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆனால், விநாயகருக்கு நீங்கள் செய்யலாம். கீழே தரப்பட்ட நீண்....ட பட்டியலில், உங்களுக்கு தேவையானதை டிக் பண்ணிக்குங்க...
தண்ணீர், எண்ணெய், சீயக்காய், பஞ்சகவ்யம், ரசப்பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர், சந்தனாதித்தைலம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர்,  மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப்பொடி கொண்டு அபிஷேகம் செய்யலாம்.



சிங்கிள் பசங்க... இதை படிங்க...



திருமணமாகாமல் ‘முரட்டு சிங்கிள்’ போல வலம் வருபவரை, ‘‘பேசாம விநாயகர் மாதிரி கல்யாணம் பண்ணாம ஆத்தங்கரையில போய் உட்கார்ந்துக்க...’’ என்பார்கள். ஆனால், விநாயகருக்கு சித்தி, புத்தி என 2 மனைவிகள் உள்ளனர். அவர்களுடன் விநாயகருக்கு ஆண்டுதோறும் திருமணமே நடக்கிறது என்ற கதை தெரியுமா உங்களுக்கு? ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் ‘வெயிலுகந்த விநாயகர்’ கோயில் உள்ளது. தமிழகத்திலேயே விநாயகருக்கு இங்குதான் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதுக்கும் ஒரு ஆன்மிக கதையிருக்கு... கேட்குறீங்களா?

ராமபிரான் தனது மனைவி சீதாவை மீட்பதற்காக இலங்கை செல்லும்போது, வழியில் உப்பூரில் ஓய்வு எடுத்திருக்கிறார். அப்போது வனப்பகுதியில் இருந்த விநாயகரை வணங்கி தியானம் செய்திருக்கிறார். அப்போது எழுந்த அசீரிரியில், ‘‘விநாயகருக்கு திருமணம் செய்து வைத்தால், உன் மனைவி சீதாவை சிக்கலின்றி மீட்கலாம்’’ என ஒலித்தது. இதனைத்தொடர்ந்து விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியரை திருமணம் செய்து சீதாவை மீட்டார் ராமர் என புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்ல... விநாயகருக்கு யானை தலை என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இதனால் தேவர்களின் திருமணங்களில் விநாயகர் குழப்பங்களை ஏற்படுத்தினார். அவர்கள் பிரம்மனிடம் முறையிட்டுள்ளனர். உடனே, பிரம்மன் சித்தி, புத்தி என 2 அழகான பெண்களை உருவாக்கி, விநாயகருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

ஆசியாவின் மெகா ஆனைமுகத்தான்

ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை திண்டுக்கல், கோபாலசமுத்திரக்கரை பகுதியில் உள்ளது. மொத்தம் 32 அடி. பூட்டு, பிரியாணிக்கு புகழ் பெற்ற ஊரில், இவ்ளோ பெரிய சிலை ஏன்?  கோயில் நிர்வாகி கணேஷ்பாபு கூறுவதை கேட்போமே... எனது தந்தை மருதநாயகம் தீவிர விநாயகர் பக்தர். ஆலமரத்தடி விநாயகரை வணங்கி வந்த அவருக்கு, 108 விநாயகர் சிலைகளை கொண்டு கோயில் கட்ட வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2002ல், 108 கருங்கல் விநாயகர் சிலைகளை  உருவாக்கி கோயிலில் பிரதிஷ்டை செய்தோம்.

அதற்கு பின்தான் இந்த மெகா பிள்ளையாரை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது. ஊத்துக்குளியை சேர்ந்த சண்முகவேல் ஸ்தபதி, சுமார் 3 ஆண்டுகளாக உருவாக்கியது இந்த சிலை. ஒரே கருங்கல்லால் ஆனது. இதே கோயிலில் தமிழகத்திலேயே முதன்முறையாக 11 அடியில் வியட்நாம் மார்பிளில், செய்த அமர்ந்த நிலை சிவனையும் பிரதிஷ்டை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


வணங்கும் நேரம்

விநாயகர் சதுர்த்தியை சூரிய உதயத்துக்கு முன் அதிகாலை வழிபடும்போது நல்ல நேரம் பார்க்க வேண்டியது இல்லை. உதயத்திற்கு பிறகு வணங்க வேண்டிய நேரத்தை பார்க்கலாமா?

Tags :
× RELATED ஆத்ம தரிசனம் என்றால் என்ன?