×

குடியரசு விழா சிறப்பு விருந்தினர் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வரவில்லை

புதுடெல்லி: இந்தாண்டு குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிய உச்சமாக 58,784 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக இந்திய பயணத்தைல அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று திடீரென ரத்து செய்தார். பிரதமர் மோடியை நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஜான்சன், கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டியிருப்பதால், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தார். அதே நேரம், ஜி-7 மாநாட்டுக்கு முன்பாக இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருவதாக அவர் உறுதி அளித்தார்….

The post குடியரசு விழா சிறப்பு விருந்தினர் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வரவில்லை appeared first on Dinakaran.

Tags : Republic Day ,UK ,India ,New Delhi ,Boris Johnson ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் வெற்றி: உலக தமிழர்கள் பாராட்டு