×

கீழடி அகழாய்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் தமிழகத்துக்கு மாற்றம்: இந்திய தொல்லியல்துறை உத்தரவு

சென்னை: இந்திய தொல்லியல்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், முன்னதாக கீழடி அகழாய்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மீண்டும் தமிழகத்திற்கு பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மதுரைக்கு தென்கிழக்கில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியது. இதில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்குப் பிறகு மாநில தொல்லியல் சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.அந்தவகையில் வைகை ஆற்றங்கரை நாகரிகம் தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதில் மதுரையை அடுத்த கீழடி பகுதியில் பழங்கால நகரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டில் அவர் தலைமையிலான குழுவினர் 2ம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டனர். இதில் 5,000க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இது அகழாய்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு அடுத்தகட்ட அகழாய்வுக்கு தயாராகி வந்த நேரத்தில், அவரை இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு தமிழ் கலாசாரத்தின் பழமையை மறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு சம்மந்தப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்துள்ளதாக கூறி அரசியல் கட்சிகள், தொல்லியல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் தற்போது இந்திய தொல்லியல்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 13 பேரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் தமிழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். …

The post கீழடி அகழாய்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் தமிழகத்துக்கு மாற்றம்: இந்திய தொல்லியல்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Amarnath Ramakrishnan ,Tamil Nadu ,Archaeology Order ,Chennai ,Indian Archaeology Department ,Indian Archaeology Order ,
× RELATED நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின்...