×

கீழக்கரை கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் அலைகள்

கீழக்கரை: கீழக்கரை கடற்கரை பகுதியில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்தது. நள்ளிரவில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடற்கரை பகுதியில் நேற்றிரவு 12 மணியளவில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்தில் ஒளிர்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து பொதுமக்கள் ஏராளமானோர் கடற்கரையில் குவிந்தனர். தொடர்ந்து, அவர்கள் செல்போனில் வீடியோ மற்றும் போட்ேடாக்களை எடுத்து மகிழ்ந்தனர். தற்போது சமூக வலைதளங்களில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,‘‘ இயற்கையாகவே நிறைய உயிரினங்கள் ஒளியை உமிழ்வதுண்டு, மின்மினிப் பூச்சிகள் வெப்பத்துக்குப் பதிலாக ஒளியை சக்தியாக வெளியிடுகின்றன. ஒளி உமிழும் நுண்ணுயிரிகள் கடலில் காணப்படுகின்றன. மேலும், புழு இனங்கள் இனப்பெருக்க காலங்களில் ஒளியை உமிழும். முக்கியமாக, ஆழ்கடல்களில் சூரிய வெளிச்சம் அதிகம் படாத இடங்களில் சிலவகை மீன்களும் ஒளியை உமிழும். சில பருவ காலங்களில் ஆக்சிஜனேற்றம் நடக்கும் போது தான் ஒளி உமிழும் நடக்கிறது. ஒளியை உமிழும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் வலையில் மாட்டிக்கொள்ளும். அப்போது வெளியாகும் ஒளியை கண்டு மீன்கள் தப்பித்து விடும். பாக்டீரியாவை உண்ணும் மீன்களின் எச்சத்தில் ஒளி உமிழும் பண்பு மிச்சமிருக்கும். அதுவும் சில நேரங்களில் ஒளி வீசும். கீழக்கரையில் நீண்ட காலமாக ஒளிர்வு நடைபெறாமல் இருந்திருக்கலாம். சிறிய அளவிலான காலநிலை மாற்றத்தால் நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இதனால் தொலைதூர பாக்டீரியக்கள் இங்கு வந்து ஒளிர்ந்திருக்கலாம். பாக்டீரியக்கள் ஒன்றிணைந்து திட்டுதிட்டாக இணைந்து ஒளியை உமிழ்ந்ததால் நீல நிறம் ஏற்பட்டு இருக்கும். இது இயற்கையான நிகழ்வு தான்,’’என்றார்….

The post கீழக்கரை கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் அலைகள் appeared first on Dinakaran.

Tags : Keezakarai ,Keezakarai beach ,
× RELATED புதிய குடிநீர் தொட்டி கட்ட மக்கள் வலியுறுத்தல்