×

கிருஷ்ணராயபுரம் அருகே ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

 

கிருஷ்ணராயபுரம், ஜூலை 2: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் ஒன்றிய அரசு தண்ணீருக்கு வரி போடும் முடிவை கண்டித்து விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் கடைவீதியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசு தண்ணீருக்கு வரி போடும் முடிவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார்.கரூர் மாவட்ட விவசாய சங்க செயலாளர் சக்திவேல் பொருளாளர் சுப்பிரமணியன், கிருஷ்ணராயபுரம் சிபிஎம் ஒன்றிய செயலாளர். தர்மலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். இறுதியாககதவணையால் பாதிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழு கரிகாலன் நன்றி கூறினார்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே ஒன்றிய அரசை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Association ,Union Government ,Krishnarayapuram ,Mayanur ,Tamil Nadu Farmers' Association ,Mayanur Market ,Krishnarayapuram, Karur district ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...