×

‘கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்எல்ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி’ பைக் நம்பர் பிளேட் உடன் வாலிபர் படம் சமூக வலைதளங்களில் வைரல்

நாகர்கோவில் : ‘கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்எல்ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி’ என்ற பெயரில் பைக் நம்பர் பிளேட் உடன் வாலிபர் படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ, பா.ஜ வை சேர்ந்தவர் எம்.ஆர்.காந்தி. இவரது பெயரை நம்பர் பிளேட்டில் எழுதி  வாலிபர் ஒருவர் விலை உயர்ந்த பைக்குகளில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் முதல் வைரலாகி வருகிறது. பாஜவை சேர்ந்தவர்களே இதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த பைக்குகளில் முன்பகுதியில் நம்பர் பிளேட் இருக்க வேண்டிய இடத்தில் ‘கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்.எல்.ஏ  எம்.ஆர்.காந்தி’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு பைக்கில் அந்த வாலிபர் அமர்ந்து இருப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படங்களை சமூகவலைதளவாசிகள் பகிர்ந்து கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். பைக்கில் நம்பர் பிளேட் இருக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற நேம் போர்டு வைக்கலாமா? என தொடங்கி இந்த விமர்சனங்கள் தொடர்கிறது. பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் என்று பல தளங்களிலும் இந்த படங்கள் உலாவந்துகொண்டு இருக்கிறது. இது தொடர்பாகஎம்.எல்.ஏ தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் வெளியாகவில்லை.  இந்த படம் அம்ரிஸ் பிஜேபி என்ற பேஸ்புக் முகவரியில் இருந்துதான் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்கின்றனர்.  அதே வேளையில் படத்தில் இடம்பெற்ற வாலிபர்எம்.ஆர்.காந்தியின் கார் ஓட்டுநர் கண்ணனின் மகன் அம்ரிஸ் ஆவார்….

The post ‘கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்எல்ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி’ பைக் நம்பர் பிளேட் உடன் வாலிபர் படம் சமூக வலைதளங்களில் வைரல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Shri ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...