×

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

திருத்தணி,:  கிணற்றில் தவறிவிழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். திருத்தணி அருகே உள்ள மேதினிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. விவசாயி. இவருக்கு சொந்தமாக ஒரு பசுமாடு உள்ளது. பசுமாட்டை அருகில் உள்ள வயல்வௌிகளில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் நேற்றும் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டிருந்தார். அந்த பகுதியில் சுற்றித்திரிந்த பசுமாடு அதே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 45 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தது. இதனால் வெளியில் வர முடியாமல் பசுமாடு தவித்தது. இதற்கிடையில், வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச வந்த செல்வராஜ், பசுமாடு தனது கிணற்றில் விழுந்திருப்பதைபார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த திருத்தணி தீயணைப்பு  நிலைய அலுவலர் அரசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணிநேரம் போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர். பின்னர் மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்….

The post கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Madinipuram ,Tiruthani ,
× RELATED திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்