×

காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது

நாகப்பட்டினம்,ஏப்.7: காவிரி டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி எடுக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என முக்குலத்து புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி நிறுவன தலைவர் ஆறுசரவணன் பிரதமர் மோடி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: டெல்டா மாவட்டங்களில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி வடசேரி, மகாதேவப்பட்டினம், கூப்பச்சிக் கோட்டை, உள்ளிக்கோட்டை, பரவாக் கோட்டை, கீழக்குறிச்சி, அண்டமி, கொடியாலம், கருப்பூர் , பரவத்தூர், நேம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும் எந்த ஒரு நாசக்கார திட்டங்களுக்கும் மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது. அப்படி இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்தால் டெல்டா விவசாயிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

The post காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Cauvery Delta ,Nagapattinam ,Union government ,Cauvery Delta district ,Trikullam Tigers Party ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED திருமுட்டம் பகுதியை காவேரி டெல்டா...