×

காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்ற முதியவர் உயிரிழப்பு

கரூர் மே 21: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று முதியவர் இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள காவிரி ஆற்றங்கரையோரம் குளிக்கச் சென்ற 70 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதியினர் வாங்கல் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வாங்கல் போலீசார், ஆற்றில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்து கிடந்த முதியவர் யார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்ற முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery river ,Karur ,Vangal ,Karur district ,Karur district… ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...