×

காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை

பூந்தமல்லி, அக். 27: ஆவடி அருகே காவல் உதவி ஆய்வாளர் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆவடி அடுத்து திருமுல்லைவாயல் எஸ்.எம். நகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (46). இவர், 2002ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதியில்லாமல் லீவு எடுத்தும் வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மீண்டும், வேலைக்கு சென்றால் உயர் அதிகாரிகள் திட்டுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்திருந்த சானிடைசரை எடுத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டு தள்ளாடியவர் கூச்சலிட்டு கீழே விழுந்தார். இதனை கேட்ட குடும்பத்தார் ஓடி வந்து அவரிடம் விசாரித்தனர். இதில், தான் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தது குறித்து கூறியுள்ளார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எஸ்ஐ தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். எஸ்ஐ சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Avadi ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு...