×

காலில் பலத்த காயம்?: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்…கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி.!!!

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காலில் காயம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திராணாமுல் காங்கிரஸ் கட்சியும், எப்படியாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.இதற்கிடையே, கடந்த மார்ச் 5-ம் தேதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது. அதில்,பானர்ஜி நந்திகிராமில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, நந்திகிராமில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.இந்நிலையில், பிருலியா பஜாரில் சில குடிமக்களுடன் உரையாடிய பின்னர் மம்தா பானர்ஜி தனது காரில் ஏறிக்கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் 4 அல்லது 5 பேர் அவரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த மம்தாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கி காரின் பின்சீட்டில் உட்காரவைத்தனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் மம்தா பானர்ஜியிடம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஆமாம், அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். என்னை சுற்றி போலீஸாரே இல்லை. பாருங்கள் கால் எவ்வளவு வீக்கமாக இருக்கிறது என்றார்.நந்திகிராமில் இன்று வேட்புமனு தாக்கல் செய்து, தனது தொகுதியில் இன்னொரு நாள் தங்க திட்டமிட்டிருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராமில் தாக்கியதை அடுத்து கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து, கொல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், மம்தா பானர்ஜி ஸ்டக்சரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்ததையடுத்து இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் உள்ளூர் நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ளது. மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். …

The post காலில் பலத்த காயம்?: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்…கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி.!!! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Kolkata ,Mamata Banerjee… ,
× RELATED டீஸ்டா நதி நீர் பங்கீடு இந்தியாவுடன் வங்கதேசம் விரைவில் பேச்சுவார்த்தை