காரைக்காலில் கடல் உணவு பொருட்களை தயாரித்தல் பயிற்சி வகுப்பு

 

காரைக்கால்,செப்.13: காரைக்காலில் கடல் உணவுப் பொருட்களை தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான பயிற்சி வகுப்பை, சப்-கலெக்டர் ஜான்சன் துவக்கி வைத்தார். காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி சமூக அறக்கட்டளை மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி வங்கி நபார்டு ஆகியவை மூலம் 15 நாட்கள் மகளிர் கடல் உணவுப் பொருட்களை தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான பயிற்சி வகுப்பினை முடித்தவர்களுக்கு தொழில் துவங்குவதற்கான பணியினை காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் மீன்வளத் துறை துணை இயக்குனர் கோவிந்தசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நபார்டு வங்கியின் மண்டல மேலாளர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியினை முடித்தவர்களுக்கு தொழில் துவங்க உள்ள நிலையில் பெண்கள் சுயமாக முன்னேற இது ஒரு உந்து கோலாக அமையும் எனவும் நன்றாக பயிற்சி முடித்து முன்னணி வங்கிகள் மூலம் இவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு பாராட்டுகளையும் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் தெரிவித்தார். இந்நிகழ்வில் வெஸ்ட் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் சுப, பத்மினி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

The post காரைக்காலில் கடல் உணவு பொருட்களை தயாரித்தல் பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: