காரியாபட்டி :தமிழக அரசு மற்றும் டாபே நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்து கொடுக்கும் திட்டம், காரியாபட்டி அருகே மேலத்துலுக்கன்குளத்தில் துவங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், வேளாண்மை பொறியியற்துறை செயல் பொறியாளர் சங்கர்ராஜ், பொறியாளர் உதயன், அருப்புக்கோட்டை டிஎஸ்பி சகாயஜோஸ் மற்றும் மல்லாங்கிணறு காவலர் மணிகண்டன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் முன்னின்று விவசாயிகளின் நிலங்களில் உழவுப்பணியை கண்காணித்து வருகிறார். 2 ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டாவை இணைத்து பதிந்து வைக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் உழவு செய்து கொடுக்கப்படும். இதில் சமூக ஆர்வலர் ரங்கசாமி, நந்திகுண்டு ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் கூறுகையில், தமிழ்நாடு உழவன் செயலி அல்லது ஜே.பார்ம் செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 180 042 00 100 என்ற எண்ணிலும் பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்….
The post காரியாபட்டியில் இலவச கோடை உழவு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.