×

காதல் தோல்வியால் விரக்தி டாஸ்மாக் ஊழியர் தற்கொலை

அண்ணாநகர்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சித்குமார் (18). இவர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி செங்குன்றத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு வந்த இவர், தனது நண்பர்களுடன் சினிமா, பார்க், கடற்கரை என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். பின்னர், கடந்த 8ம் தேதி, திருப்பூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த இவர், அங்குள்ள கடையில் குளிர்பானம் வாங்கி அதில் எலி மருந்து கலந்து குடித்துள்ளார். பின்னர், மறுபடியும் பஸ் மூலம் தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். தம்பி திரும்பி வந்ததை பார்த்த அவரது அக்கா, ‘‘ஏன் திரும்பி வந்துவிட்டாய், ஊருக்கு போக வில்லையா’’ என்று கேட்டபோது, ‘‘நான் குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்துவிட்டேன்.

என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்’’ என்று கூறியபடி மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது அக்கா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சஞ்சித்குமாரை சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவரை அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சஞ்சித்குமார் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், காதல் தோல்வியால் இவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

The post காதல் தோல்வியால் விரக்தி டாஸ்மாக் ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Annanagar ,Sanjith Kumar ,Ramanathapuram district ,Tirupur district ,Dinakaran ,
× RELATED தனிநபருக்கு எத்தனை பாட்டில்...