×
Saravana Stores

காதலித்து பிரேக்அப் செய்த நடிகருடன் ஜெனிபர் லோபஸ் 4வது திருமணம்

லாஸ்வேகாஸ்: ஹாலிவுட் நடிகையும், பாடகியும், டான்சருமான ஜெனிபர் லோபஸ் (53), தன்னைவிட 3 வயது குறைந்த நடிகர் பென் அஃப்லெக் என்பவரை 4வது திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் கடந்த ஏப்ரலில் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. பென் அஃப்லெக்கும், ஜெனிபர் லோபஸும் 2002ல் முதல்முறை சந்தித்தனர். அப்போது ‘கிக்லி’ என்ற படத்தில் நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. 2 ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்த அவர்கள், 2004ல் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக்அப் செய்து பிரிந்தனர். இதையடுத்து நடிகர் ஒஜானி நோவா (1997-1998), டான்சர் கிறிஸ் ஜட் (2001-2003), பாடகர் மார்க் ஆண்டனி (2004-2014) ஆகியோரை ஜெனிபர் லோபஸ் அடுத்தடுத்து திருமணம் செய்தார்.ஆனால், 3 திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தது. ஜெனிபர் லோபஸுக்கு மேக்ஸ், எம்மே என்ற 14 வயது இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். பென் அஃப்லெக் ஏற்கனவே நடிகை ஜெனிபர் கார்னெர் என்பவரை திருமணம் செய்து, பிறகு விவாகரத்து செய்துவிட்டார். இத்தம்பதிக்கு ஒய்லெட், செரபினா, சாமுவேல் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜெனிபர் லோபஸை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார் பென் அஃப்லெக். இதுகுறித்து ஜெனிபர் லோபஸ் கூறும்போது, ‘காதல் மிகவும் அழகானது. அன்பு கனிவானது.  20 வருடங்கள் பொறுமையாக இருந்ததால், அன்று நாங்கள் விரும்பியது தற்போது சரியாக நடந்துள்ளது. 5 குழந்தைகள் கொண்ட புதிய அற்புதமான குடும்பம் எங்களுக்கு கிடைத்துள்ளது’ என்றார்….

The post காதலித்து பிரேக்அப் செய்த நடிகருடன் ஜெனிபர் லோபஸ் 4வது திருமணம் appeared first on Dinakaran.

Tags : Jennifer Lopez ,Las Vegas ,Hollywood ,Ben Affleck ,
× RELATED நான் ஒரு சராசரி நடிகைதான்