×

காஞ்சி, சென்னை, திருவள்ளூரில் வியாபாரிகளிடம் 16.86 லட்சம் பறிமுதல்

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படையினர் வட்டாட்சியர் வெங்கட்ரமணன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஓஎம்ஆர் சாலையின் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பூஞ்சேரி சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர். வாகனத்தை ஓட்டி வந்த மேடவாக்கத்தைச் சேர்ந்த சோலைராஜா (43), தனது அரிசி மண்டியில் வேலை பார்ப்பதாகவும், கோவளம் மற்றும் மாமல்லபுரம் பகுதியில் அரிசி மூட்டைகளை கடைகளுக்கு சப்ளை செய்து விட்டு திரும்பி வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வாகனத்தில் நடத்திய சோதனையில் 85 ஆயிரம் இருப்பது தெரிந்தது. அந்த பணத்துக்கு ரசீது எதுவும் இல்லை. இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனியிடம் ஒப்படைக்கப்பட்டது.சென்னை : பெரம்பூர் தொகுதி மகாகவி பாரதி நகர் மத்திய நிழற்சாலையில் இளநிலை பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் அந்தோணி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பைக்கில் வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தபோது, அவரிடம் ₹7 லட்சம் இருந்தது. அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர அரசு பஸ்சை சோதனையிட்டனர். அப்போது, பெட்டோல் பங்க் ஊழியர் மகேஷ் என்பவரிடம் உரிய ஆவணமின்றி 5,57,250 இருந்தது அதை  பறிமுதல் செய்தனர்.இதேபோல், எளாவூர் அருகே தலையாரிபாளையத்தில், ஆந்திராவில் இருந்து வந்த காரை மறித்து சோதித்தனர். அதில், ஆவணம் இல்லாமல் 1.4 லட்சம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், ஐயர் கண்டிகை கிராமத்தில் நடத்திய வாகன சோதனையில், சுரேஷ் என்பவரது காரில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 63,560 பறிமுதல் செய்தனர். ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை அடுத்த சீத்தஞ்சேரி கிராமத்தில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், குஞ்சலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர், கோயம்பேட்டில் வாழை தார் விற்பனை செய்த 1,40,200 வைத்திருந்தார். அதற்கான ஆவணம் இல்லாததால், அதனையும் பறிமுதல் செய்தனர்….

The post காஞ்சி, சென்னை, திருவள்ளூரில் வியாபாரிகளிடம் 16.86 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Chennai ,Tiruvallur ,Tiruporur ,Tiruporur Assembly Constituency Flying Squad ,District Collector ,Venkatramanan ,OMR ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில்...