×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம்: கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறைதீர்ப்பாளராக கணேசன் என்பவர், பொறுப்பேற்றுள்ளார்.இந்திய அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள திட்ட குறைதீர்ப்பாளரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் தொழிலாளர்களிடம் இருந்து புகார்களை பெற்று, அதனை பரிசீலித்து, 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரச்னை நடக்கும் இடத்திலேயே விசாரணை நடத்தலாம். வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஊதியத்தை தாமதமாக வழங்குதல் அல்லது வேலையில்லாப்படி வழங்காதது தொடர்பான பிரச்னைகள் உள்பட பல குறைகளை தானாக முன்வந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார். எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டத்தின்  குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொதுமக்கள் திட்ட தொழிலாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட குறைதீர்ப்பாளர் கணேசனை, 9962986168 என்ற எண்ணில் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது….

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம்: கலெக்டர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram District ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்...