×

காஞ்சிபுரம், பெருநகர் பகுதி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரத்தில் செல்வவிநாயகர், பெருநகர் கிராமத்தில் ஸ்ரீபனையடி சப்பாணி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் நடுத்தெருவில் தடைகள் நீக்கும் பிரார்த்தனை தலமாக விளங்கும் செல்வ விநாயகர் கோயிலில் பணிகள் நடைபெற்று வந்தன. காஞ்சிபுரத்தில் முதன்முறையாக கடந்த 300 வருடங்களாக இல்லாத வகையில் கருங்கல்லிலான கருவறை, 2 ஸ்தல விமானங்கள், மகாமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த புதன் கிழமையன்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையுடன் துவங்கி 4 கால பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியர்களின் வேத மந்திரம் முழங்க யாக சாலையிலிருந்து கொண்டு வரப்பட்டு புனித நீரை மூலவர் கருங்கல் கோபுர விமான கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. அதனைதொடர்ந்து மூலவர் செல்வ விநாயகருக்கும் நவகிரக மூர்த்திகள், சயமக்குரவர்கள், உற்சவர் ஆகிய திருமூர்த்திகளுக்கும் புனித நீரானது ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், காண வந்த பக்தர்களின் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது.இதோபோல், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பனையடி சப்பாணி விநாயகர் கோயிலில் நேற்ற மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், விசேஷ திரவ்ய ஹோமம் ஆகியவை நடந்தன.அதன்பின் ராஜகோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், ஸ்ரீ பனையடி சப்பாணி விநாயகருக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாவை கான அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.மேலும் வந்திருந்த அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது.வாலாஜாபாத்: சித்தர்கள் வழிபாடு செய்த பெருமைக்குரிய 2,400 ஆண்டுகள் பழமையானதுமான காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சி வள்ளுவப்பாக்கத்தில் மனோன்மணி சமேத தான்தோன்றீசுவரர் கோயில் உள்ளது. இதன், ராஜகோபுரம், மூலவர் மற்றும் அம்பாள் சந்நிதி கோபுரங்கள் ஆகியன புதியதாக அமைக்கப்பட்டது. கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களான செல்வவிநாயகர், மாரியம்மன், பொன்னியம்மன், பட வேட்டம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சன்னதிகள் புதிதாக அமைக்கப்பட்டது.இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 15ம் தேதி புதன்கிழமை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை பூர்ணாஹூதி தீபாராதனைகள் நிறைவு பெற்று புனிதநீர் கலசங்கள் கோயில் கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டடு கும்பாபிஷேகம் நடந்தது….

The post காஞ்சிபுரம், பெருநகர் பகுதி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Kanchipuram ,Kumbabhishekam ,Kumbabishekam ,Sripaniadi Sabpani Vinayagar ,Chelvinayagar ,Pillaarpallalam ,Vinayakar Temples ,Kanchipuram, ,
× RELATED காஞ்சி மகா ருத்ரேஸ்வரர் கோயில்...