×

காசநோய் குழந்தைகளுக்கு விட்டமின்-டி குறைபாடு

புதுடெல்லி: தெலங்கானா மாநிலம் உஸ்மானியா மருத்துவ கல்லூரி,சித்தி பேட்டை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காச நோய் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள 70 சிறுவர்களிடம் ஒரு வருடம் 5 மாதங்கள் ஆய்வு நடத்தினர். இந்த சிறுவர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், காச நோய் கட்டுப்பாடக இருக்கும் சிறுவர்களை விட நோய் தாக்கம் உள்ள சிறுவர்களிடம் விட்டமின் டி குறைபாடு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. ஊட்டசத்து இல்லாதது,பின்தங்கிய பொருளாதார நிலைகளின் விளைவினால் இந்த நோய் வருகிறது. காச நோய் பல்வேறு நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில்இந்த நோய் அதிகம் காணப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post காசநோய் குழந்தைகளுக்கு விட்டமின்-டி குறைபாடு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Telangana ,Osmania Medical College ,Siddi Petty Government Medical College ,
× RELATED அமித் ஷா வீடியோ விவகாரம்: தெலங்கானா...