×

காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்: கே.எஸ். அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பட்டியல் தரப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற பொறுப்பாளர்கள் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொன்னேரி (தனி) தொகுதிக்கு டி.எல்.சதாசிவலிங்கம், மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், குணாநிதி, பாஸ்கர், பொன்ராஜ், சம்பத், வேளச்சேரி தொகுதிக்கு டி.என். முருகானந்தம் தலைமையில் விஜயன், மாவட்ட தலைவர்கள் அடையாறு டி.துரை, முத்தழகன், அனுசுயா, சேகர் விஜய், அசோகன், ஸ்டீபன்ராஜ், ஆர்.கே.வெங்கட் ஆகியோரும், பெரும்புதூர் (தனி) தொகுதிக்கு எம்.வசந்தராஜ், அளாவூர் நாகராஜ், விருகை பட்டாபி, கவுரி கோபால், அருள்ராஜ், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரும், சோளிங்கர் தொகுதிக்கு வாலாஜா ஜெ.அசேன், சி.பஞ்சாட்சரம், அணுகுண்டு ஆறுமுகம், அரக்கோணம் ராஜ்குமார், வி.ஆர். கிருஷ்ணகுமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று, ஊத்தங்கரை (தனி), கள்ளக்குறிச்சி (தனி), ஓமலூர், ஈரோடு (கிழக்கு), உதகமண்டலம், கோவை (தெற்கு), உடுமலைப்பேட்டை, விருத்தாசலம், மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, மேலூர், வில்லிபுத்தூர் (தனி), சிவகாசி, திருவாடனை, வைகுண்டம், தென்காசி, நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்….

The post காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்: கே.எஸ். அழகிரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,K.S. Alagiri ,Chennai ,Tamil Nadu ,President ,KS Azhagiri ,Congress party ,Tamil Nadu Assembly ,KS. Alagiri ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...