×

காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி பாசறை

 

விருதுநகர், மே. 22: விருதுநகர் எம்பி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தியின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி பாசறை நடைபெற்றது. மேற்கு மாவட்ட காங். கமிட்டி தலைவர் ரெங்கசாமி பயிற்சி பாசறையை துவக்கி வைத்தார். திறன்மேம்பாட்டு பயிற்சியாளர் பாண்டியராஜன், சிவகுருநாதன், வழக்கறிஞர் சீனிவாசன், ஓய்வு பெற்ற பத்திரப்பதிவாளர் காந்திராஜன், எழுத்தாளர் செவலூர் நிலா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். நிகழ்ச்சிகளை கிழக்கு மாவட்ட இளைஞர் காங். தலைவர் மீனாட்சிசுந்தரம் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

The post காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி பாசறை appeared first on Dinakaran.

Tags : Congress party ,Virudhunagar ,Rajiv Gandhi ,Congress ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி...