×

களக்காட்டில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

களக்காடு, செப்.12: களக்காட்டில், வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்து, உறுப்பினர் அட்டைகள் வழங்கினார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகருணாநிதி, மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாநில தொடண்டரணி துணை செயலாளர் ஆவீன் ஆறுமுகம், ஒன்றிய அவை தலைவர் யாக்கோபு, ஒன்றிய பொருளாளர் தங்கத்துரை, துணை செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், அருள்ஜோதி, காந்தி, மாவட்ட பிரதிநிதிகள் ஐயப்பன், கிருஷ்ணன், மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமங்கள் தோறும் திமுக கொடி ஏற்று விழா நடத்துவது, திமுக வளர்ச்சிக்கு உழைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post களக்காட்டில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kalakat ,Kalakkad ,Union of Northern Union ,Nella ,East District Secretary ,Auvadiappan ,Northern Union ,Selvakarunanidhi ,District ,Treasurer ,Jargkosal ,Dimuka General Members Meeting ,Dinakaran ,
× RELATED களக்காட்டில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு