×

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் டிஏவி பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; பள்ளி, கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் புத்துணர்ச்சி பெருகிறேன். நான் பிறந்து வளர்த்த கோபாலபுரத்தில் டிஏவி பள்ளி முதன் முதலாக தொடங்கப்பட்டது. சென்னையில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கல்வி சேவை வழங்கி வருகிறது டிஏவி குழுமம். டிஏவி குழுமத்தில் 30,000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தாய்மொழி கல்விக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். தாய்மொழி பற்றும் தாய்நாடு பற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக முக்கியம். போட்டிகள் நிறைந்த உலகத்தில் மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி என்பதே இருளில் இருந்து ஒளிக்கு கொண்டு செல்வது தான். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை தவிர்க்க  நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்விக்கு மட்டுமல்லாமல் கல்லூரி கல்விக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து என்றால் கல்வி மட்டும் தான். அரசு சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி கொடுத்துள்ளோம். பள்ளித்திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் எனவும் கூறினார். …

The post கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,DAV School ,Pallikarana, Chennai ,M.K.Stal ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...