×

கல்லும் முள்ளும் உள்ளதே பெண்கள் பாதை: சென்னை சாஸ்திரி பவனில் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு..!!

சென்னை: பெண்களின் பாதை எப்பொழுதும் கல்லும், முள்ளும் உள்ள பாதையாகத் தான் இருக்கும் என்றும், அதை கடந்து கோட்டையை அடையும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சாஸ்திரி பவனில் நடந்த மகளிர் தின சிறப்பு கருத்தரங்கை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து நாட்களும் பெண்களுக்கான நாள் தான் என்பதால் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார். மற்ற மாநில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் தமிழகத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் நன்றாக படிக்க வேண்டும்; சாதனை செய்ய வேண்டும்; மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என எண்ணுவதுதான் உரிமை என தெரிவித்தார். உரிமைகளை புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் பேசியதாவது, பெண்களுக்கான உரிமையை நாம் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறோம். கண்டமேனிக்கு உடை உடுத்துவதை தான் பெண்ணுரிமை என்று நினைக்கின்றனர். ஆனால் நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் இருக்கிறது. ஆகவே பெண்கள் உடை அணியும்போது ஒரு கட்டுபாடு இருக்க வேண்டும். இதனால் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் பெண்களுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்றும் ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தால்தான் சரியாக நடந்து கொள்வார்கள் என்றும் கேள்வி எழுகிறது. இதனிடையில் பெண் உரிமை எது என்று நாம் நினைப்பதில் தான் பிரச்னை நிலவுகிறது. எனவே பெண்கள் நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும். மற்றவர்கள் முகம் சுளிக்கும் அடிப்படையில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன்  பேசினார்.      …

The post கல்லும் முள்ளும் உள்ளதே பெண்கள் பாதை: சென்னை சாஸ்திரி பவனில் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Tamilisai Soundararajan ,Shastri Bhavan ,Chennai ,
× RELATED அறிவுரைதான் வழங்கினார்; சும்மா...