×

கலைஞர் நூலகத்திற்கு புதிய இணைய தள பக்கம்

 

மதுரை, ஆக. 5: மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பெயரில் புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு பொது நூலகத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து www.kalaignarcentenarylibrary.org என்ற பெயரில் புதிய இணையதள பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதள பக்கம் மூலம் நூலகம் பற்றிய சிறப்புகள், உறுப்பினர் சேர்க்கை, நூலகத்தில் உள்ள புத்தகங்கள் தொடர்பான விபரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்த விவரம் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களும், பொதுமக்களும் இந்த இணையதளம் மூலம் புத்தகங்கள், எழுத்தாளர்கள் தொடர்பான தகவல்களை தேடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் உறுப்பினர் சேர்க்கை விரைவில் ஆன்லைன் முறையில் மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நூலக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூலகத்திற்கு புதிய இணைய தள பக்கம் appeared first on Dinakaran.

Tags : Library ,Madurai ,Artist Centenary Library ,Madurai… ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி