×

கலெக்டர் பாராட்டு அரியலூர் மாவட்டம் 95.40 %தேர்ச்சி

அரியலூர், மே 20:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு. இதில் அரியலூர் மாவட்டம் 95.40 தேர்ச்சி சதவீதத்துடன் 6 இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில் 172 பள்ளிகளை சேர்ந்த 5,079 மாணவர்கள், 4,781 மாணவிகள் என 9,860 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 4,748 மாணவர்கள், 4,658 மாணவிகள் என 9,406 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.40 சதவீத தேர்ச்சியாகும். மாநிலத்தில் அரியலூர் மாவட்டம் 6 இடத்தை பிடித்துள்ளது.100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: அரியலூர் மாவட்டத்தில் 37 அரசு பள்ளிகள், 1 அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 4 அரசு உதவிப்பெறும் பள்ளிகள், 18 மெட்ரிக் பள்ளிகள், 11 சுயநிதி பள்ளிகள் என 71 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

The post கலெக்டர் பாராட்டு அரியலூர் மாவட்டம் 95.40 %தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ariyalur District ,Ariyalur ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED மின் இழுவை கம்பிகளில் கால்நடைகளை...