×

கலெக்டர்கள் 24 மணிநேரம் கிராமங்களில் தங்கி இன்று கள ஆய்வு மாதந்தோறும் 4வது புதன்கிழமை தொடரும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

வேலூர்: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மூலம் கலெக்டர்கள் 24 மணிரேம் கிராமங்களில் தங்கி இன்று கள ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை கிராமங்களில் கள ஆய்வு தொடர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி மாதத்தில் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதுடன், பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத் திட்டங்களும் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவே ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமானது மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை நடத்தப்படும். அந்த நாள் விடுமுறை தினமாக இருக்கும்பட்சத்தில் அதற்கடுத்த வேலை நாளில் முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கலெக்டர்கள் இன்று கிராமங்களில் தங்கி கள ஆய்வு செய்கின்றனர்.

 

The post கலெக்டர்கள் 24 மணிநேரம் கிராமங்களில் தங்கி இன்று கள ஆய்வு மாதந்தோறும் 4வது புதன்கிழமை தொடரும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Maniram ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில்...