×

கற்கள் பிசினெஸிலும் கலக்கலாம்!

எத்தனை யுகங்கள், அறிவியல் முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னமும் கற்கள் அது சார்ந்த நம்பிக்கைகள் மட்டும் மாறவில்லை. உதாரணத்திற்கு ஏதேதோ விட்டுச் சென்ற வெள்ளையர்கள் இந்தியர்களின் கோஹினூர் வைரத்தை இன்னமும் சொத்து போல் பாதுகாப்பதை நாம் மறுக்கவே முடியாது. எனினும் மார்வெல் தானோஸ் கடத்திச் செல்லும் கற்கள் போல் மந்திர மாயாஜால சக்திகள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் நல்ல எனர்ஜிகளை ஈர்க்கும் சக்தி கற்களில் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. மறுப்பதற்கான ஆதாரங்களும் இல்லை. ஆனால் கற்களால் நன்மைகள் நடக்கின்றன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் அறிவியலிலேயே உள்ளன. சில கற்கள் குறிப்பிட்ட சக்தியை ஈர்க்கும் என்பதற்கும் நிறைய ஆதாரங்கள் விஞ்ஞானத்திலேயே இருப்பதால்தான் விண்வெளியில் இருந்து கொண்டு வரப்படும் கற்களை எவ்வித தொடர்புமின்றி தனிமைப்படுத்தி ஆராய்ச்சி செய்வது வழக்கம். அப்படித்தான் நம் உடலில் அணியப்படும் சில கற்களுக்கும் நல்ல சக்தியை, பாசிட்டிவ் எனர்ஜியை இழுக்கக் கூடிய சக்திகள் உண்டு. ஆனால் எப்படி தேர்வு செய்ய வேண்டும், எப்படி அணியலாம் என அதற்கான முழுமையான ஆராய்ச்சியில் இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரஞ்சனி சூரி. ‘சென்னையிலே பிறப்பு, பாண்டிச்சேரியிலே வளர்ப்பு. திருமணத்துக்கு பின்னாடி புனே போயிட்டேன். அப்பறம் குழந்தை பிறந்தப்பறம் தான் எனக்குள்ள நிறைய நிம்மதியில்லாத பிரச்னைகள், நான் யார் என்கிறதிலே சில கேள்விகள். கிட்டத்தட்ட பேபி புளூஸ் மாதிரி பிரச்னை வந்திடுச்சு. அப்போதான் என் ஃபிரெண்ட் ஒரு கிறிஸ்டல் கல் ஒண்ணு கொடுத்தாங்க. நிஜமாவே அதனால் மாற்றம் உண்டாச்சா இல்லை, எனக்குள்ள தானாகவே உருவான மாற்றமா இப்படி நிறைய கேள்விகள். ஆனால் நல்ல முன்னேற்றம். அப்போதிருந்தே இந்தக் கற்கள் மேலே பெரிய ஆர்வம் வர ஆரம்பிச்சது. இதைப்பற்றி படிக்கணும்ங்கற ஆர்வமும் வந்திடுச்சு. நம்ம வாழுகிற பூமியிலேயும் சரி, ஆகாயத்திலும் சரி எல்லா இடங்களும் மினரல்கள் நிறைஞ்சு இருக்கு. இந்த மினரல்களை அடிப்படையாகக் கொண்டுதான் கிறிஸ்டல்களை நாம பயன்படுத்தணும். போலவே இந்த ராசிக்கல், ஜோதிடக் கல், இதெல்லாம் வேற. உங்க பிறந்த தேதி, ராசி, நட்சத்திரம் வைச்சு கொடுப்பாங்க. ஆனால் கிறிஸ்டல் ஹீலிங் முறை வேற உங்களுக்கு என்ன மனக்குறையோ அதைப் பொருத்து கிறிஸ்டல்கள் தேர்வு செய்வாங்க. சிலர் எனக்கு விடாத தலைவலி அல்லது முதுகு வலின்னு சொல்வாங்க. இதெல்லாம் உடல் சக்ரா அடிப்படையிலே சரி செய்யும். ஆனால் இதுவே தீர்வுன்னு சொல்ல மாட்டேன். இது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும். ஒரு நம்பிக்கை, பிடிமானம் வந்திட்டாலே நாம அமைதியாகிடுவோம். கூடவே நிச்சயம் மருத்துவமும் பார்க்கணும். பரீட்சைக்கு போகணும்னா படிச்சிட்டும் போகணும், கோவிலுக்கு மட்டும் போயிட்டு பரீட்சை எழுதக் கூடாது. அப்படிதான் இதுவும். கற்கள் மனநிலையை அமைதிப்படுத்தி நம்பிக்கையை உண்டாக்கும். அது கூடவே நீங்க மருத்துவமும் எடுக்கும் போது உடல் இன்னும் கொஞ்சம் மருத்துவர் சொல்றதைக் கேட்கும். நான் இதற்காகவே ஹாலிஸ்டிக் ஹீலிங் கோர்ஸ் சர்வதேச அளவிலே படிச்சிருக்கேன்’ என்னும் ரஞ்சனி சூரி கிறிஸ்டல் என்றாலே கொள்ளை விலை விற்கும் நிலையில் மிகச் சிறிய பட்ஜெட்டில் எல்லோருக்கும் இந்த கிறிஸ்டல் சென்று சேர வேண்டும் என குறைந்த பட்ஜெட்டில் கொடுக்கிறார். ‘இன்னைக்கு அவசர உலகம், வேலை, மன அழுத்தம், சரியான தூக்கமில்லை, பசியில்லை. இதெல்லாம் சர்வ சாதாரணமானதா மாறிட்டு இருக்கு. அதையெல்லாம் அவங்க பட்ஜெட்டில் நான் சரி செய்யணும்னு நினைச்சேன். அதனால்தான் இந்த பட்ஜெட்’ கற்கள் என்றாலே ரூ.10000 மேல்தான் என்னும் நிலையில் ரூ.900 முதல் ரஞ்சனியிடம் கிடைக்கிறது. மேலும் இதனை சரியான முறையில் படிச்சு ஒரு ஹீலிங் புராசெஸா செய்யணும்னு நினைக்கறவங்க முறைப்படி படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு, இந்த பிசினெஸ் செய்யறது நல்லது.தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

The post கற்கள் பிசினெஸிலும் கலக்கலாம்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை...