×

கறம்பக்குடி பகுதிகளில் நெல் அறுவடை தீவிரம் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்

 

கறம்பக்குடி,ஜன.20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் விவசாயம் மிகுந்த பகுதியாக விளங்குவதால் வருடம் தோறும் தை மாதம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் வழக்கம்போல தை மாதத்தில் கறம்பக்குடி, அம்பு கோவில், கேகே பட்டி, ரெகுநாதபுரம், கீழாத்தூர், கல்லுமடை, காட்டாத்தி, மலையூர் கருக்காகுறிச்சி, அதிரான் விடுதி, சூரக்காடு, புதுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் விவசாயம் செய்த விவசாயிகள் தங்கள் பயிரிட்ட நெல் பயிர்களை இயந்திரம் வைத்து அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் கரம்பக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக ஆரம்பமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது எனவே விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி உடனடியாக கூடுதலாக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் குறிப்பாக கரம்பக்குடி பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக ஆரம்பமாகியுள்ளது அடுத்து விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கறம்பக்குடி பகுதிகளில் நெல் அறுவடை தீவிரம் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Pudukottai district ,Thai ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி