×

கரூர் மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம்

கரூர், ஜூன் 5: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் தொடர்பாக இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் தொடர்பாக இன்று (5ம் தேதி) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின்கீழ் வீடுகளை புனரமைப்பு செய்திடும் வகையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியல் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறுதல் சம்பந்தமாக இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே, கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் மாவட்டத்தில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Special Grama Sabha ,Karur district ,Karur ,Collector ,Thangavel ,district… ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...