×

கரூர் மாரியம்மன் கோயிலில் திருவிழா: நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றிய பக்தர்கள்

 

கரூர், மே 19: கரூர் மாரியம்மன் கோயிலில் உள்ள கம்பத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் ஊற்றிச் சென்றனர். கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த 11ம்தேதி அன்று கம்பம் நடும் நிகழ்வுடன் துவங்கியது.

மே 12 ம்தேதி முதல் தொடர்ந்து தினமும் அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தண்ணீர் குடத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றிச் சென்று வருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமும் அதிகாலை நேரத்தில் அதிகளவு பக்தர்கள் வந்து வரிசையில் காத்திருந்து தண்ணீர் ஊற்றிச் செல்வதால் கரூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, தாந்தோணிமலை போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். வைகாசி விழாவினை முன்னிட்டு நேற்று கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேண்டிக் கொண்ட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு காப்புகட்டி சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

The post கரூர் மாரியம்மன் கோயிலில் திருவிழா: நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றிய பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Karur ,Maryamman ,Temple ,Karur Maryamman Temple ,Karur Mariyamman Temple Vaikasy Festival ,Karur Maryamman Temple Festival ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...