×

கரூர் தபால்நிலையம் அருகே கழிவுநீர் குட்டையால் சுகாதார சீர்கேடு

 

கரூர், ஜூலை 5: கரூர் தலைமை தபால் நிலையம் அருகே தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாநகரின் மையத்தில் தலைமை தபால் நிலையம் செயல்படுகிறது. அனைத்து விதமான ஆர்ப்பாட்டங்களும் இதன் அருகில் நடைபெறுவதோடு, அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் இந்த பகுதியை மையப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், தபால் நிலையம் அருகே கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி தூய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு விரைந்து தூய்மைப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

The post கரூர் தபால்நிலையம் அருகே கழிவுநீர் குட்டையால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Karur Post Office ,Karur ,Karur Head Post Office ,Head Post Office ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...