×

கரும்பு விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

தேனி, ஆக. 22: தேனி அருகே வயல்பட்டி கிராமத்தில் உழவர் நலத்துறை சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேனி அருகே வயல்பட்டி கிராமத்தில் தேனி மாவட்ட உழவர் நலத்துறையும், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையும் இணைந்து அட்மா திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி அளத்தனர். பயிற்சி முகாமிற்கு வேளாண்மை துணை இயக்குநர் காந்தி தலைமை வகித்தார்.

வேளாண்மை உதவி இயக்குநர் ராமசாமி முன்னிலை வகித்தார். சர்க்கரை ஆலை மேலாளர் பழனிவேல், கரும்பு அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பயிற்சியின்போது, நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்தும், விவசாயிகளுக்கு ஒரு பருகரணை நடவு, தண்ணீர் உபயோகிப்புத் திறன், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் உரமிடுதல், மேலும் ஊடுபயிர் சாகுபடி சொட்டு நீர் பாசனம் அமைத்து நல்ல மகசூல் பெறுவது குறித்து பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜக்கையன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாண்டீஸ்வரன் கண்மணி செய்தனர்.

The post கரும்பு விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Theni ,Farmers Welfare Department ,Vyalpatti ,Theni… ,Dinakaran ,
× RELATED தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்